Friday, 3 September 2021

பசிக்காக பசுவை விற்கும் ஜாக்

பசிக்காக பசுவை விற்கும் ஜாக் 

22 ஜூன் அன்று, பீன்ஸ் கொடியில் ஜாக் கதையின் முதல் பகுதி 6 வயது Abdiel க்கு சொல்ல முடிந்தது.... செம்ம ஆர்வமாக கதை கேட்டான்.. நாளை பள்ளி என்பதால் பாதி மட்டுமே சொன்னேன்...

பசிக்காக பசுவை விற்கும் ஒரு சிறுவனை ஒரு பீன்ஸ் விதையை கொடுத்து அவனையும் அவன் அம்மாவையும் பட்டினி போட்ட ஒரு ஜித்தனை நினைக்கும் போது ஜாக் பசி தீர ஒரு அரக்கனின் தேட்டையை தேட்டை போடுவது நியாயம் தானே. மாயாஜால கதைகளில் வரும் அரக்கன் போலல்லாது இங்கே உள்ள அரக்கன் மனிதர்களை விட கொஞ்சம் உயரமாக (8 -10 அடி) உள்ளான்... ஆக இவனும் நரமாமிசம் உண்ணும் மனிதவம்சம் போன்றே சித்தரிக்கப்பட்டுள்ளான். அரக்கன் குழந்தைகளை உண்ணும் ஒரு cannibal என்னும்போது நமது ஜாக் தன்னை காக்கும்பொருட்டு அவனை வீழ்த்திய ஹீரோதானே. குட்டீஸ்களுக்கு நல்ல விதமாக இந்த கதையை சொல்ல முடியும் என்று தான் நினைக்கிறேன்.

விடுமுறை நாட்களில் இதனை வெளியிட்டு இருந்து இருக்கலாம். ஆசிரியர் குட்டீஸ்கள் பொருட்டு சில முன்னுரை பின்னுரை போட்டு moral வருமாறு சொல்லியிருக்கலாம் தான். வழக்கமாக அவர் மொழிபெயர்ப்பில் சுமாரான கதைகளும் ஜொலிக்கவே செய்யும் எனும் போது இன்னமும் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து இருக்கலாம் தான். 



பீன்ஸ் கொடி மூலம் தங்க காசு கிடைக்கும் என்று ஏமாற்றப்பட்ட ஜாக் அதே நம்பிக்கையில் அரக்கனிடம் திருடும் படலம் என்னுள் நிறைய நினைவு படுத்தி விட்டது.

நான் 3 வகுப்பு படிக்கும்போது கொழுத்த மாங்காய் ஒன்று கல்லால் அடித்து ஆட்டைய போட்டேன்... இது போல ஒன்றிரண்டு திருட்டு எனது அந்நாளைய crime. அதற்குப் பிறகு நைசாக அப்பாவின் பாக்கெட்டில் துழாவி சில்லறை எடுத்து காமிக்ஸ் வாங்குவேன்.
மேலும் சில நண்பர்களுக்கு குற்றச் சக்கரவர்த்தி ஸ்பைடர் கதைகள் பிடிக்காது என்று அறிவேன். நானோ 5ம் வகுப்பு முதல் ஸ்பைடர் பிரியன். ஆனால் ஸ்பைடர் கதை ஒருபோதும் என்னை திருடிட தூண்டியதில்லை. எனது காமிக்ஸ் போதை என்னை தங்கமுட்டையிடும் ஒரு பழைய புத்தக கடையில் ஒரு குட்டி காமிக்சிற்கு ஆசைப்பட்டு முழு புதையலையும் கோட்டை விட்ட திருடனாக்கியது... அது யார் கதை?

1987 கோடைமலரில் வெளிவந்த டெக்ஸ் வில்லரின் பழிக்கு பழி கதையின் கிழிக்க ப்பட்ட பிரதி தான் அது. ட்ராகன் நகரம் வெளிவந்த சமயம் தான் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தேன். அதுவரை நான்கு டெக்ஸ் கதைகள் வெளிவந்தது. ஒன்று கூட நான் படிக்க இயலவில்லை. அப்போதே டெக்ஸ் வில்லர் எட்டாத உயரத்திலே தான் இருந்தார். அதனாலேயே என்னமோ ஈர்ப்பு ஏற்பட்டு எப்படியும் டெக்ஸ் வில்லர் கதையை படித்திட தீரா ஆசை ஏற்பட்டு விட்டது. அதன் விளைவு. ஒரு ஞாயிறு அன்று  நண்பனுடன் காமிக்ஸ் புத்தக வாடகைக்கு எடுத்திட சென்றவன், மெம்பர் ஷிப் ஆகிட என்னிடம் பணம் இல்லையென்பதால் ஒரு நூறு பக்கம் கிழிக்கப்பட்டு இருந்த டெக்ஸ் வில்லர் பழிக்கு பழி கதையின் கிழிக்கப்பட்ட  கதையினை பார்த்தவுடன் அதனை அபேஸ் செய்தேன். ஆனாலும் கடைக்காரரிடம் தொக்காக மாட்டிக்கொண்டேன். விளைவு... அதற்கு பிறகு என்னை நீண்ட நாட்களாக அவர் அந்த புத்தக கடைக்குள் என்னை அனுமதிக்கவே இல்லை.

(வேறு வழியின்றி ஒரு நண்பனை அனுப்பி எப்படியோ காசு கட்டி மேம்பராகி சில அரிய காமிக்ஸ்கள் பெற்று கொண்டேன். பின்னர் சிலவருடங்கள் கழித்து கடைக்குள் என்னை அனுமதித்தார், அன்றோ... அந்தோ! அங்கே காமிக்ஸ் எல்லாம் சுத்தமாக காலியாகி போய் இருந்தது.) இந்த கசப்பான அனுபவத்திற்கு பின் நானும் தலைவனைப் போல நீதிக்காவலனாகி விட்டேன்.

டெக்ஸ் வில்லர் தான் வாங்க முடியாது படிக்க ரொம்ப காலமானது... டிராகன் நகரம். 1988ம் வருஷம் டிராகன் நகரம், மகா பாரதம் டிவியில் ஒளிபரப்பான நேரம் எனக்கு வீட்டு அருகாமையில் உள்ள கடையில் ரூபாய் 1.50/- க்கு கிடைத்தது. பூரிப்பு தாங்காமல் வீடு வந்து புக்கில் குதித்து விட்டேன். MAHABARATHA பாஞ்சாலி துகில் உரிப்பு கிராபிக்ஸ் காட்சியை DD டிவியில் பார்க்க அம்மா கூப்பிட, வாங்கின டெக்ஸ் கதையை அப்படியே வைச்சிட்டு போய் பார்க்க, அட டெக்ஸ் வில்லர் செய்யும் அதகளம் முன் இந்த கிராபிக்ஸ் காட்சி எம்மாத்திரம்? அடச்சே என்றபடி வெளியே வந்து டிராகன் நகரில் மூழ்கிய என்னை சீரியல் முடிந்ததும் என் அப்பா பார்த்த பார்வை இருக்கே, இதுக்கு தானாடா.. .இந்த புக் உனக்கு பெரிசா போச்சுலே... என்றும் உறுமியபடியே வெளியே போனார்... அன்று தான் ரேஞ்சர் டெக்ஸ் ஒரு கொள்ளைக்காரர் ஆனார். நானும் கூட அந்நாட்களில் தீவிர டெக்ஸ் பிரியனாக்கும்...

டெக்ஸ், 1988ல் ரஜினி என்றால் எத்தனை ஈர்ப்போ அந்த மாதிரி ஒரு பவர்ஃபுல்லான ஒரு பெயர் தான் டெக்ஸ் .

இரண்டு ரூபாய் விலையில் வெளியான பழிவாங்கும் பாவை தவிர்த்து, அதுவரை வெளியான டெக்ஸ் கதைகள் எல்லாம் மூன்று ரூபாய், ஐந்து ரூபாய்  விலை கொண்ட ஸ்பெசல் இதழ்களே. அதுவும் சென்னையில் கிடைப்பது அத்தனை சுலபமல்ல. 

பால்யத்தில் ஒரு நாள் உடம்பு சரியில்லைன்னு ஸ்கூலுக்கு மட்டம் போட்டு விட்டேன்.. வீட்டில் வெறுமனே இருப்பதை விட அம்மாவிடம் கொஞ்சம் காசு கேட்டு காமிக்ஸ் வாங்க போனபோது கிடைத்தது ஒரு ஜாக்பாட். 1987 கோடை மலர் அட்டையில்லாமல் கிடைத்தது. அந்த டெக்ஸ்ட் புக் ஆசையாய் வாங்கினேன். மட்டம் போட்டு காமிக்ஸ் படிக்கும் குற்றவுணர்வுடன், ஸ்பைடர் கதை முடித்து டெக்ஸ் வில்லரின் பழிக்கு பழி படித்து கொண்டிருந்தேன். அந்த டெக்ஸ் புக் ஆசையாய் படித்து கொண்டிருந்தேன்.
 
அன்று சீக்கிரம் மதியமே தனது அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய தந்தை எனது படித்து கொண்டிருந்ததை பார்த்த எனது தந்தை கையில் வைத்திருந்த லயன் கோடைமலர் (1987) பிரதியினை கிழித்து போட்டார்.. நான் ஸ்கூல் போகாமல் காமிக்ஸ் படிப்பதை பார்த்து பொறுக்காமல் புக்கை பிடுங்கி எடுத்து நார்நாராக கிழித்து போட்டார். அவருக்கு ஒழுக்கம் முக்கியம். . (என்றாலும் அப்பா கொடுத்த அந்த டிரீட்மென்ட் என்னை பள்ளிக்கூடம் 100 சதவீதம் attendance உடன் லீவு போடாமல் தொடர்ந்து போக என்னை மாற்றியது).

ஆனாலும் அன்று அப்பாவுக்கு இப்படி ஏதாவது கோபம் வந்து எனது 50க்கும் மேற்பட்ட காமிக்ஸ் புக் எல்லாம் கிழித்து தூக்கி எரிந்து விடுவாரோ என்று பயந்தேன். எனவே அதன் பாதிப்பில் காமிக்ஸ் படிக்க தடையேதும் இல்லாத எனது நண்பன் ராஜேஷ் (என் நண்பன் T ராஜேஷ் , (அடையார்) இப்போது USல் நிரந்தர பணி செய்கிறார்.) அயனாவரம் வீட்டிலே பாதுகாப்பாக எனது கூட்டு சேகரிப்புக்காக எனது 50க்கும் மேற்பட்ட சிறிய ஆனால் முக்கியமான அரிய காமிக்ஸ்  (கத்திமுனையில் மாடஸ்டி முதற்கொண்டு) புதையல்களை குரூப் காலெக்ஷன் ஆக கொடுத்து வைத்திருந்தேன்.
பிறகு அவனது ஸ்கூல் மாற்றம் பின்னே நாங்கள் வெவ்வேறு இடங்களுக்கு மாறினோம். இப்படி கையில் இருந்த எனது காமிக்ஸ் புதையல்களை தாரை வார்த்து கொடுத்தேன்.
ஓரளவுக்கு சோசியல் மீடியா மூலம் தொடர்புக்கு வந்த பிறகு அவனது வீடு அடையார் இந்திரா நகரில் இருப்பதும் அவனது இன்ஜினியர் தந்தை எனது காமிக்ஸ் சேகரிப்பும், அவனது சேகரிப்பும் சேர்த்து ஒரு காமிக்ஸ் சேகரிப்பாளருக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார் என்று தெரிய வந்தது... யார் அது என்றெல்லாம் துப்பறியும் வேலை எனக்கு வேண்டாம் என்று நினைத்தேன்... So just pause.

அன்று டெக்ஸ் வருடம் இரண்டு முறை வந்தபோது இருந்த சூப்பர் கதைகள் இப்போது நிறைய டெக்ஸ் வரும் போது இல்லை என்பது என் எண்ணம். டெக்ஸ் ஐ மனதில் வைத்து கொண்டு பலமுறை மேலதிகாரிகளை வறுத்து எடுத்துள்ளேன்
விளைவு increment, bonus கட்😓... ஆக 2 வருசம் முன்னே அதற்கு  மேலும் பாதிப்பு வந்து விட்டது. கடந்த வருடம் கூட ஒருத்தன் ஓவரா பேசினதால் வேலையை தூக்கியெறிந்து விட்டேன், YET I am happy with my decision...Will get good opportunity soon. -Udhayakumar, Chennai.

3 comments:

  1. இதுவரை எங்கள் கண்ணில் காட்டாத லயன் காமிக்ஸின் முகமான, அபிமான ஸ்பைடர் தோன்றும் "spider vs sinister seven" 150 பக்க கதையை முடிந்தவரை நாசூக்காக எடிட் செய்து, உங்களின் தனித்துவ மொழிப்பெயர்ப்பில், இருப்பட பேனல்ககளாக (நீதிக் காவலன் ஸ்பைடர் போல quality உடன்) எந்த சைஸிலாவது, ஏழு தனித்தனி சாகசங்களாக, இக்கதை விரும்புவோர்களின் ஆர்டரின் பேரில் (300 or 500 or 1000 or 2500 nos?), எந்த கட்டுப்படியாகும் விலையிலாவது வெளியிடுங்கள் சார் தயைசெய்து.

    இந்த புத்தக தயாரிப்புப்பணிகளில் எந்த உதவி தேவை என்றாலும் நான் உதவிடுகிறேன் ஸார்!
    ஆர்ச்சியின் கதைகளையும் அப்படியே சேர்த்து!

    ReplyDelete
  2. Very nice! Good to hear your comics love and it experience.

    ReplyDelete
    Replies
    1. Thank you bro, for reading this and commenting.

      Delete

ஒளி எமது ஒலி உமது - ஒளியும் ஒலியும்

 Comics2day Contest ஒளி எமது ஒலி உமது - ஒளியும் ஒலியும் Click this picture to view the video இந்த ஓன்றரை நிமிட வீடியோவை காணுங்க...